எரிமலைகளின் வெடிப்புகளை வணங்குகிறோம்

நெருப்பு மலையினை சுற்றி / புகைப்பட காப்புரிமை தியரி கார்டன் / பலடியம் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
நெருப்பு மலையினை சுற்றி / புகைப்பட காப்புரிமை தியரி கார்டன் / பலடியம் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015

“இவ்வுலகத்தில் வாழ்வின் யதார்த்த நடத்தையைத் தீர்மானமாகப் பதிவு செய்யும் நோக்கத்துடன் வேலை செய்யும் இளம்புகைப்படகலைஞர்கள், தாங்கள் மரணத்தின் தூதுவர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. இவ்வாறான வழியிலேயே நமது காலம் ‘மரணத்தை யூகித்துக் கொள்கிறது’ – 

ரோலண்ட் பார்த்’, கேமரா லூசிடா, 1980

திருவண்ணாமலையின் EtP 365 நாள் ‘ப்ராஜெக்ட் 365’ திட்டத்தினுள் நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. புகைப்படங்கள் என்ன விதமானப் பணியைச் செய்கிறது என்று யாராவது விளக்கினால் அது அயர்ச்சியைத் தருகிறது. ஏனெனில் புகைப்படங்கள் விளங்கிக் கொள்வதற்கான சூத்திரம் அல்ல, யாரும் விளங்கிக் கொள்ளவும் முடியாது. அசையாத புகைப்படங்கள்  தினமும் அசைகிறது, நம் மனதை அசைய வைக்கிறது. ஒரே ஒரு புகைப்படமே கலீடாஸ்கோப் போல காலங்கள் சுழல, சுழல புதிய அனுபவங்களையும், வண்ணச்சேர்க்கைகளையும் தருகிறது. சிலருக்கு கேளிக்கை இன்பமாயும், சிலருக்கு வழிபடும் பிம்பமாயும், சிலருக்கு ஆழ்ந்த விசாரணையை எழுப்பும் விதமாகவும் இருக்கிறது. காலங்களினால் நினைவுகள் உறைந்திருக்கும் மாய வித்தை அது. சில புகைப்படங்களை நோக்கினால் அது அழிவையும், ஆனந்தத்தையும் ஒரு சேர வைத்திருக்கும் கூரிய வாள்.

திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம் / புகைப்பட காப்புரிமை ஆர். ஆர். சீனிவாசன் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம் / புகைப்பட காப்புரிமை ஆர். ஆர். சீனிவாசன் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015
ஸ்தபதிகளும் வாஸ்து சிற்பமும் / புகைப்பட காப்புரிமை பிஜு இப்ராகிம் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
ஸ்தபதிகளும் வாஸ்து சிற்பமும் / புகைப்பட காப்புரிமை பிஜு இப்ராகிம் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015
கனவுகளின் பிம்பங்கள் / புகைப்பட காப்புரிமை ஷிவ் கிரண் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
கனவுகளின் பிம்பங்கள் / புகைப்பட காப்புரிமை ஷிவ் கிரண் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015

பல்வேறு அலைவரிசையுள்ள புகைப்படக்கலைஞர்கள், 365 நாட்கள் 360 டிகிரியிலும் திருவண்ணாமலையைப் புகைப்படம் எடுப்பதுவே இத்திட்டத்தின் நோக்கம். பின்பு இதுவே மிக அற்புதமான ஆவணக்காப்பமாக மாற்றப்படும். திருவண்ணாமலை ஏற்கெனவே புகைப்படக்கலைஞர்களின் நகரமாகவே இருந்து வருகிறது. உலகின் மிக முக்கியப் புகைப்படக்கலைஞர்கள்  கடந்த நூறாண்டுகளாக  திருவண்ணாமலையைப் பதிவு செய்துள்ளார்கள். இது ரமணரால் நடந்தது. ரமணர், புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டிருந்தார். கவின் புகைப்படக்கலைஞர்களை எளிதாக அவரால் கண்டுணர முடிந்தது. அன்றிலிருந்து வேறு சிறு நகரங்களுக்கு இல்லாத புகைப்படப் பதிவுகள் திருவண்ணாமலைக்கு உண்டு. அவ்விதமே ஓவியப்பதிவுகளும். மேலும், திருவண்ணாமலை நகரமே தொல்லியல் நகரம்தான். திருவண்ணாமலையின் மலைகள் மிகப்பழமையானவை. குறைந்தது 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன் நடந்த எரிமலை வெடிப்பினால் வெளியானவை இம்மலைகள். இமாலயத்தை விடப் பழமையானதாக இருக்கலாம். முழுவதும் சார்க்கோனைட் கற்களால் ஆனது. மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போல. நியூட்ரினோ விஞ்ஞானிகளின் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். இதன் தொன்மைக்காகவே நாம் இதனை வழிபடுகிறோம்.

 இயக்குனரின் உபகாட்சிகள் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
இயக்குனரின் உபகாட்சிகள் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015
அண்டைடில்ட் / புகைப்பட காப்புரிமை வாஸ்வோ எக்ஸ் வாஸ்வோ / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
அண்டைடில்ட் / புகைப்பட காப்புரிமை வாஸ்வோ எக்ஸ் வாஸ்வோ / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015

ஒரு மலையையும், அதனைச் சுற்றியுள்ள வாழ்வியலையும் பதிவு செய்வதென்பது ஒரு புகைப்படகலைஞருக்கு விருந்துதான். வாழ்வியல் எனும்போது மதரீதியிலான சடங்குகள், சம்பிராதயங்கள் நிறைந்த கோவில் பண்பாடு அல்ல, கோவிலுக்கு எதிரான பண்பாட்டையும் பதிவு செய்ய விரும்புகிறோம். வாழ்வியலின் அனைத்துக் கூறுகளையும் பகுத்தறிவின் கண் கொண்டு உணருவதே இங்கு முக்கியம். திருவண்ணாமலை தீபம் உலகப்பிரசித்தம். தீபம் எவ்வாறு உருவாயிற்று எனத் தேடினோமானால் அயோத்திதாசப்பண்டிதரிடமிருந்து விடையைப் பெற இயலும். ஆமணக்கு விதையிலிருந்து எண்ணெயை எடுத்து எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என்ற கண்டுபிடிப்பின் விளைவாக உருவான வெற்றியின் நினைவே இம்மலையில் தீபமேற்றுதல் எனக் கூறிப்பிடுகிறார்.

பெரியபுராணமும் சமகாலகாட்சிகளும் / புகைப்பட காப்புரிமை பாக்கிய ஸ்ரீ பட்கி / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
பெரியபுராணமும் சமகாலகாட்சிகளும் / புகைப்பட காப்புரிமை பாக்கிய ஸ்ரீ பட்கி / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015
கிருஸ்தவர்கள் / புகைப்பட காப்புரிமை லியோ ஜேம்ஸ் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
கிருஸ்தவர்கள் / புகைப்பட காப்புரிமை லியோ ஜேம்ஸ் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015

மலையும், மலையைச் சுற்றியுள்ள வாழ்வு என்பதும் மட்டுமல்ல. மலையிலிருந்து விடுபட்டவர்களையும் இத்திட்டம் பதிவு செய்ய விரும்புகிறது. நவீன வாழ்க்கையிலிருந்து, புத்த, சைவ, சமண, சூஃபி, வைணவ, கிறித்துவ என எல்லா மதங்களின் வாழ்வினூடாகவும் ஒரு பயணம், இடையர்களின் தொன்மங்கள், தமிழ் நிலப்பரப்பின் தொல்லியல் சின்னங்கள், ரமணரின் பாதைகள், வனவாசிகளின் வாழ்க்கை, பறவைகள், சந்தைகள், கோவில், விலங்குகள், செடிகள், மரங்கள், குகைகள், சாதுக்கள், குழந்தைகள், தொல்கவிதைகள், நதிகள், வேளாண் மரபுகள், இடப்பெயர்வு, திரைப்படம், அரசியல், மத உறவுகள், குடும்பங்களின் உருவச்சித்திரங்கள் எனப்புகைப்படகலைஞர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. காண முடியாத ஒரு கனவு நனவாகிறது.

 இயக்குனரின் உபகாட்சிகள் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
இயக்குனரின் உபகாட்சிகள் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015
புகைப்பட சேவா / புகைப்பட காப்புரிமை வருண் குப்தா / 4 X 5 லார்ஜ் பார்மட் பிலிம் நெகடிவ் / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
புகைப்பட சேவா / புகைப்பட காப்புரிமை வருண் குப்தா / 4 X 5 லார்ஜ் பார்மட் பிலிம் நெகடிவ் / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015

ரமணரையும், அருணாச்சலேஸ்வர கோவிலையும் தாண்டி திருவண்ணாமலை பல தொடர்ச்சிகளைக் கொண்டுள்ளது. ராமலிங்க வள்ளலாருக்கு உத்வேகம் கொடுத்த ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் கல்விப் பணிகளால் இந்நகரத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் வளம் பெற்றுள்ளனர். அதன் பணிகள் இன்னும் தொடர்கின்றன. அதனூடாகவும் நாம் பயணிக்க இருக்கிறோம்.

ஒரு நல்ல கலைஞனின் கனவு எப்போதும் மதச்சாற்பற்றதல்ல. மதமற்றே இருக்கிறது.  அபுல் கலாம் ஆசாத் மத, இன, மொழி, தேச இடையூறற்ற புகைப்படங்களால் கட்டப்பட்ட ஒரு  கோவிலை திருவண்ணாமலையின் உயரத்திற்கு கனவு காண்கிறார். அவரும், புகைப்படகலைஞர்களும் களைப்பின்றி எறும்புகள் போல கேமராவுடன் வேலை செய்கிறார்கள். மலையின் உயரம் அதிகம்தான், ஆனால் எறும்புகள் வேலை செய்வதை நிறுத்துவதில்லை.

பாரம்பரிய நாட்டு வைத்தியமும் மருந்துகளும் / புகைப்பட காப்புரிமை பீ. வீ. / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
பாரம்பரிய நாட்டு வைத்தியமும் மருந்துகளும் / புகைப்பட காப்புரிமை பீ. வீ. / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015

திருவண்ணாமலை புகைப்படங்களின் அடித்தளத்தை  பல்வேறு புகைப்படகலைஞர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர், P.R.S. மணி, T.N. கிருஷ்ணசாமி, ஹென்றி கார்டியன் பிரஸ்ஸோன், எலியட் எலிசபோன், கோவிந்த் வெல்லிங், இரினோ குர்க்கி போன்றோர் உறுதியான புகைப்படப்பாதையை அமைத்துள்ளனர். உண்மையிலேயே இது நம்பமுடியாத அதிசயமான பாதைதான். ஏதோ ஒரு வகையில் புகைப்படக்கலைஞர்களுக்கான ஒளியூட்டும் விளக்காக ரமணர் இருந்திருக்கிறார். ரமணரின் வாழ்க்கையில் இம்மண்ணின் தொல்குடிச் சிந்தனைகளையும், விடுதலை உணர்வையும் தந்த நாரயண குருவும் இடம் பெற்றிருக்கிறார். இருவரின் சந்திப்பும் மிக முக்கியமானது என்று கருதுகின்றனர், இப்புகைப்படத் திட்டத்தின்  கலைஞர்கள்.

திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம் / புகைப்பட காப்புரிமை ஆர். ஆர். சீனிவாசன் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம் / புகைப்பட காப்புரிமை ஆர். ஆர். சீனிவாசன் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015

பல்வேறு கருத்துக்களையும், சிந்தனைகளையும் குறித்து தொடர்ந்து எழுதினாலும் புகைப்படக்கலைஞர்கள் உத்வேகம் பெற்றுப் புகைப்படங்கள் எடுப்பதற்கு இவை மட்டும் காரணமல்ல.  அகமனங்களில் உறைந்திருக்கும் ஆழ்மன அசைவே புகைப்படங்களை உருவாக்குகிறது. விட்டு விடுதலையான, குழந்தைமை உணர்வே, அற்புதமாகவும், ஆச்சரியத்துடன் இவ்வுலகைப் பார்க்க வைக்கிறது. அற்புதங்கள் இல்லையெனின் புகைப்படக்கலைஞன் இல்லை. ஒரு புகைப்படம் உருவாகும்போது, படிமங்களை ஒருங்கிணைக்கும்போது கேமரா வழியாகப் பார்க்கும்போது, முழு உடலே ஒரு ஸ்கேனர் ஆக மாறும்போது, அடிவயிற்றில் ஏற்படும் அழுத்தங்களும், மாறுதல்களும்,  ஒரு புகைப்படம் உருவாவதற்கு முந்தைய கணம் புகைப்படக்கலைஞர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இது, ஒரு சிறுவன் புதிய உலகத்தைக் காண்பதற்கு ஒப்பானது. முதிர்ந்த புகைப்படக்கலைஞனின் வாழ்பனுபவமும், அவன் பெற்ற விருதுகளும் இங்கு அவனுக்கு உதவாது. அற்புதங்களே மெளனம்.

பெரியபுராணமும் சமகாலகாட்சிகளும் / புகைப்பட காப்புரிமை பாக்கிய ஸ்ரீ பட்கி / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
பெரியபுராணமும் சமகாலகாட்சிகளும் / புகைப்பட காப்புரிமை பாக்கிய ஸ்ரீ பட்கி / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015
மதங்கள், அரசியல், சினிமா / புகைப்பட காப்புரிமை சீமா கிருஷ்ண குமார் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
மதங்கள், அரசியல், சினிமா / புகைப்பட காப்புரிமை சீமா கிருஷ்ண குமார் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015
வாழும் அறைகள் / புகைப்பட காப்புரிமை ஆர்னவ் ராஸ்டோகி / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
வாழும் அறைகள் / புகைப்பட காப்புரிமை ஆர்னவ் ராஸ்டோகி / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015

புகைப்படக்கலை இன்று வியாபாரமாகி விட்டது. கேலரிகள் தாங்கள் விரும்புபவர்களை முன்னிறுத்தும் வணிக நோக்கம் கொண்டுள்ளன. புகைப்படக்கலை மெட்ரோ நகரங்களின் கலையாக, மேட்டுக்குடியினரின் அடையாளமாக இன்று மாறியுள்ளது. இதன் நேரெதிர் திசையில் வணிக நோக்கமின்றி, எளிய மக்களின் கலையாக, ஒரு சீரிய கலைப்படைப்பைக் கிராமங்களுக்கு கொண்டு செல்வதே  EtP 365 திட்டத்தின் அடிப்படை நோக்கம். கிராமங்களிலிருந்து, சிறு நகரங்களிலிருந்து ஒரு படைப்பை உருவாக்குதல், மீண்டும் அதனை கிராமத்திற்கே கொண்டு செல்வது , இதுவே நம் திட்டத்தின் தலையாய நோக்கம். மகத்தான புகைப்படக்கலைஞர்கள், ஓவியர்களை கிராமங்களுக்கு வரவழைப்பது, உள்ளூர் கலைஞர்கள், கைவினைஞர்கள், மற்றும் கொத்தனார்கள், விளம்பரப்பலகை எழுதுபவர்கள், உலோக வேலை செய்பவர்கள் என பன்முகக்கலைஞர்களோடு ஆழமான உறவுகளை ஏற்படுத்தி, அனைவரும் இணைந்து உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதைத்தவிர புகைப்படப் பயிற்சி வகுப்புகள், செய்முறை விளக்கங்கள், புகைப்படக்கலை பயணங்கள், குழுவாகச் சென்று படம் பிடித்தல்,ஊசித்துளை கேமராவை உருவாக்கி படம் பிடித்தல், அழிந்து கொண்டிருக்கும் பிலிம். நெகட்டிவ், பிரிண்டிங், கழுவுதல் குறித்தப்பயிற்சிகள் என விரிவான வேலைத்திட்டங்களைக் கொண்டுள்ளோம், இவையனைத்தையும் முறையாக ஆவணப்படுத்திப் பாதுகாப்பதே இறுதிப்பணியாக உள்ளது.

பழமை வாய்ந்த அண்ணாமலையின் உயிரின வாழ்க்கைச் சூழலியல் / புகைப்பட காப்புரிமை ஜிபி சார்லஸ் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
பழமை வாய்ந்த அண்ணாமலையின் உயிரின வாழ்க்கைச் சூழலியல் / புகைப்பட காப்புரிமை ஜிபி சார்லஸ் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015
அண்டைடில்ட் / புகைப்பட காப்புரிமை ஜோசப் சாக்கோலா / வான் டைக் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 - 2015
அண்டைடில்ட் / புகைப்பட காப்புரிமை ஜோசப் சாக்கோலா / வான் டைக் புகைப்பட அச்சு / ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்படக்கலை திட்டம் / 2014 – 2015

கூட்டு வாழ்க்கை, கூட்டுக்கனவுகள், கூட்டு மனோபாவம் கலைகளின் அடிப்படையாக இருக்க வேண்டுமென விரும்புகிறோம். மகத்தான திரைப்படக் கலைஞன் எமிர் கஸ்தூரிகாவின் ‘அண்டர்கிரவுண்ட்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இறந்து போனவர்கள் அனைவரும் வசிக்கும் நிலம் உடைந்து, தனித்து பிரிந்து போவதாகப் படம் முடிவடையும். நாம் இறந்த போனவர்களில்லை, கூட்டுணர்வுடன் ஒருவரின் கரம் பற்றிக் கொண்டு மற்றொருவரை உயிர்ப்பிப்போம்.

ஆர்.ஆர்.சீனிவாசன்

{ தமிழகத்தின் முக்கிய ஸ்ட்

ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவர். ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில், தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது புகைப்படங்கள் கண்காட்சி செய்யப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 365ல் திரு சீனிவாசன் ‘திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம்’ என்ற தலைப்பில் பங்களித்துள்ளார். }

Collectively creating and preserving photographic visuals of the fast vanishing landscape, divergent customs, pluralistic culture and diversified lifestyle of an ancient Tamil town.

புகைப்படம் – ஒரு காலனித்துவ பீதி

புகைப்படம் – ஒரு காலனித்துவ பீதி

அபுல் கலாம் ஆசாத்

நேர்முகம் (மலையாளத்தில்) காண்பவர் P.P. ஷா நவாஸ் { இந்த நேர்காணல் June 2008ம் ஆண்டு தேஷபிமானியில் மலையாளத்தில் வெளிவந்தது. 2013ம் ஆண்டு ஆர்ட் அண்ட் டீல் magazineல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. }

நீங்கள் எப்படி அபுல் கலாம் ஆசாத் என்று பெயரிடப்பட்டீர்கள்?

இந்திய சுதந்திர போராட்டத்தின் தலைவர்களுள் ஒருவரும், கேரளாவில் இஸ்லாமிய சமூகத்தை மேம்படுத்த, பெருந்தலைவர்களுடன் நட்பு கொண்டவராகவும் திகழ்ந்த மௌளானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் நினைவாக இந்த பெயரை எனது தந்தையார் எனக்கு இட்டார். என் தந்தையை பொருத்தவரை ஆசாத் என்ற பெயர் அக்கால நினைவுகளை மீட்கும் ஒரு தூண்டுதல் பெயராக இருந்தது. என்னுடைய மூதாதையர் தமிழ் நாட்டில் நெசவாளராக இருந்து பின்னர் கொச்சியில் குடி பெயர்ந்தனர். நாங்கள் வீட்டில் தமிழ் மொழி தான் பேசுவோம். நான் என்னை ஒரு தென்னிந்திய திராவிட சமுதாயத்தை சேர்ந்தவராக எண்ணிக்கொள்கிறேன். நெசவாளராகவும் துணி வியாபாரியாகவும் இருந்த என் முன்னோர்கள் பட்டுத்துணியையும் நெசவு அமைப்பின் சிறப்பையும் தரத்தையும் கண்டறிவதில் நிபுணராக இருந்தனர்.

மனிதனும் கருவிகளும் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2012
மனிதனும் கருவிகளும் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2012

நீங்கள் வளர்ந்த இஸ்லாமிய பின்புலம் பற்றிக் கூறவும்.

நாங்கள் தமிழ் இஸ்லாமிய சமுதாயத்தினை சேர்ந்தவராக இருந்தாலும், என்னுடைய சகோதரிகள் புர்கா எனும் மூடு துணியை எப்பொழுதுமே அணிந்ததில்லை. ஆனால் இப்போது எல்லா இஸ்லாமியரும் புர்கா அணியும் வினோத பழக்கத்தை காண்கிறோம். ஒருவர் அணியும் ஆடைக்கும் அவர் மதத்துக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்? மலபார் எனப்படும் வடகேரளத்தில் முஸ்லிம் பெண்கள் வெள்ளக்காச்சியும் ஜம்பரும் அணிகின்றனர். என்னுடைய அத்தைகள் பட்டாடைகள் அணிந்து எழிலாக தோற்றமளித்தனர். இப்பொழுது நம்முடைய கலாச்சார வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காணும்போது எனது மனம் திடுக்கிடுகின்றது. காலப்போக்கில் நாம் பல்வேறு கலாச்சார வேறுபாடுகளை சுவிகரித்துள்ளோம் என்பது உண்மை தான். புடவை உடுத்தியுள்ள உதாரண பெண்மணியை தேடி ரவிவர்மா குஜராத்திற்கும் மஹராஷ்டிராவிற்கும் தொலை தூர பயணம் செய்தார். புடவையானாலும் சரி, சல்வார்கமீஷ் ஆனாலும் சரி, இவை இரண்டுமே வெளி மாநிலத்திலிருந்து இங்கு வந்ததே.

டிஜிட்டல் நிலா / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / 1995 - 2005
டிஜிட்டல் நிலா / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / 1995 – 2005

நீங்கள் இந்திய புகைப்பட கலைஞர்களுள் புகழ் பெற்ற ஒருவராக விளங்குகிறீர்கள். தேசிய மற்றும் சர்வதேசிய பெருநகர வாழ்வுடன் சிறந்த தொடர்பு கொண்டவர். லண்டன், டில்லி போன்ற பல்வேறு நகரங்களில் உள்ள கலைஞர்கள் மற்றும் அறிஞர்களுடன் நீங்கள் பணிபுரிகிறீர்கள். எந்த வித சமயத்தின் உயர்வையும் நீங்கள் பறை சாற்றியதில்லை. இருப்பினும் உங்களுடைய இஸ்லாமிய அடையாளத்தை குறித்து நான் கேள்வி எழுப்புகிறேன். நீங்கள் இதை குறித்து என்ன நினைக்குறீர்கள்?  

நான் கேரளாவை விட்டு நீங்கிய போது என்னுடைய முஸ்லிம் அடையாளம் குறித்து எனக்கு எந்தவித பிரக்ஞையும் இருந்ததில்லை. அதைக்குறித்து எவரும் என்னிடம் பேசியதும் இல்லை. டில்லி, பஞ்சாப், உத்திர பிரதேஷ் போன்ற பல்வேறு இந்திய பகுதிகளில் நான் பணி புரிந்துள்ளேன். அந்த சமயத்தில் தான் பாப்ரி மசூதி உடைக்கப்பட்டது. பின்னர் பி.ஜெ.பி. பதவிக்கு வந்தது. அப்போது தான் எல்லாருடைய மனதிலும் இந்த தனித்துவ அடையாளம் பற்றிய கருத்து உருவாகியது. இந்து முஸ்லிம் என வேறுபாடுகள் வெளியே வந்தன. இரண்டு பூதங்களிலிடையே மாற்றிகொண்ட ஒருவனுடைய அச்ச உணர்வு போல் இது தோன்றியது. இந்த தனித்துவ அடையாளங்கள் பெரிதுப்படுத்தப்பட்டபொழுது பிரச்சினைகள் உருவாகின. இந்த தனித்துவ அடையாளமே பிரச்சினைகளுக்கு மூல காரணமாய் அமைந்தது. எம். எப். ஹுசைன் போன்ற கலைஞர்கள் குறித்த பிரச்சினைகள் அப்பொழுது எழுந்தன. கலாச்சாரமும் தொலைநோக்கும் சமயம் வகுத்த பாதைகளில் பயணிக்க தொடங்கின. நான் இங்கே இரண்டு சமயத்தை சார்ந்த அடிப்படை வாதிகளை குறித்தும் குறிப்பிடுகிறேன்.

தெய்வீக முகப்பு / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / சில்வர் ஜெலாட்டின் புகைப்பட அச்சு / 2000 - 2005
தெய்வீக முகப்பு / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / சில்வர் ஜெலாட்டின் புகைப்பட அச்சு / 2000 – 2005

ஒரு கலைஞன் என்பவன் குரான், தேசியம், சரஸ்வதி, பார்வதி அல்லது சிவன் பற்றி வெளிப்படையாக பேச முடியாத சூழ்நிலை உருவாகியது. கேரளாவை சார்ந்த முஸ்லிம்கள் பிள்ளையாரைப் பற்றியும் நடராஜ குருவை பற்றியும் நன்கு அறிவர். அதே சமயம் அவர் இயேசு கிறிஸ்து, புத்தன் மற்றும் மார்க்ஸ் பற்றியும் அறிவார்கள். புத்த பௌர்ணமி கேரளாவில் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. வேறுபட்ட அமைப்புகளில் ஒரே சமயத்தில் வேரூன்றியுள்ள கலாச்சார வாழ்வை நாம் கொண்டாடுகிறோம். இப்பொழுது தேசீயம் மற்றும் இனவாதம் குறித்த பிரச்சினைகளால் ஏராளமானவர்கள் பல இடங்களில் கொலையுண்டதை காண்கிறோம்.

கடவுள்களின் புகைப்படங்கள் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / 2000 - 2005
கடவுள்களின் புகைப்படங்கள் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / 2000 – 2005

வரலாற்றில் பலமுறை பலவிடங்களிலும் மீண்டும் மீண்டும் இந்நிகழ்வுகளை நாம் காண்கிறோம் – கார்பலா, ஜோர்டான், சிரியா, பாலெஷ்டைன், காங்கோ, இஸ்ரேலின் எல்லையில் கண்ணி வெடிகள் வரிசையாக புதைக்கப்பட்டுள்ளன. கோலன் குன்றுகளை குறித்து அறிவோமல்லவா? இந்தக் குன்றுகள் ஒரு யுத்தம் ஆரம்பிப்பதற்கான காரணமாகவே கருதப்படுகிறது. பெய்ட்-உல்-முக்கதாஸ் எனும் இடம் யூதர்கள், கிருஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவருக்குமே ஒரு முக்கியமான இடமாக கருதப்படுகின்றது. எல்லாருமே இந்த தளத்திற்கு விஜயம் செய்து வந்தனர். ஆனால் இப்பொழுது அது ஒரு போர்க்களமாக மாறி விட்டது. இரண்டு பக்கங்களும் இங்கே யுத்தத்தை துவக்குகின்றன. போரைப்பற்றிய நிரந்தரமான அச்சத்துடன் இங்கு மக்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருகின்றன. இதனால் மக்களின் இயற்கையான மெய்யுணர்வு மறைந்து போகலாம்.

டில்லியில் நடந்த SAHMAT பிரச்சாரத்தின் பொது சமயம் சாராமையை காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் உங்களது புகைப்படம் ஒன்றை நான் கண்டிருக்கிறேன். தலை வெட்டப்பட்ட ஒருவன் ஒரு கையில் தாமரையும் மறு கையில் வாளையும் வைத்திருக்கும் உருவச்சித்திரம் காணப்பட்டது. இது ஒரு அங்கதமான விமர்சனம். சமூக இயக்கங்களினால் பரப்பப்படும் வன்முறையையும் அழிவையுமே இது குறிக்கின்றது. அதே சமயம் ஹிம்சை உருவாக்கும் அச்சத்தினையும் இது தணிக்க முற்படுகின்றது.

பூவும் கத்தியும் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / சில்வர் ஜெலட்டின் அச்சு / 1996
பூவும் கத்தியும் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / சில்வர் ஜெலட்டின் அச்சு / 1996

இந்த புகைப்படம் சமுதாய அச்சத்தை பற்றியது. குஜராத் பிரச்சினையையே எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு சூழ்ச்சியினால் உருவானது. இதை யாருமே சரி என்று கூற முடியாது. இந்துக்களின் வன்முறை மற்றும் இஸ்லாமியரின் வன்முறை, இரண்டுமே தவறானவை. ஒவ்வொரு கொள்கையும் அதனுள் எதேச்சதிகாரம் உள்ளடக்கியது. நாம் சர்வ தேசியவாதிகளாக முயல்கிறோம். இஸ்லாமிய சமயத்தை ஒரு சர்வதேச சமயமாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. அனைவரும் ஒரே மாதிரியான உடை, உணவு, கல்வி, ஒரே மாதிரி செயல்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று இஸ்லாமிய சர்வதேசியம் கூறிக்கொண்டிருக்கிறது. நாம் குரானையோ அல்லது மார்க்சையோ மட்டுமே கற்றால் மட்டும் போதும். அவையனைத்துமே அதனுள் அடங்கி விட்டன என்ற குறுகிய எண்ணப்போக்கு பரப்பப்படுகின்றது. இந்த எதேச்சதிகார நோக்கு நவீன நாகரிகத்தின் மிகப்பெரிய எதிரி. இதே போன்ற எதேச்சதிகார உணர்வு சமயம் சார்பற்ற கொள்கைகளாலும் பரப்பப்படுகின்றது. வெவ்வேறு விதமான கலாச்சார பின்புறத்தையும் கொள்கைகளையும் கொண்டுள்ள மக்களை எங்ஙனம் ஒன்றாக இணைக்க முடியும்? இதற்கு விடையாக நான் மகாத்மா காந்தியின் முயற்சியான மக்கள் உள்ளத்தை ஒருங்கிணைப்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதற்கு நேரு கூறும் கவர்ச்சிமிக்க ராஜாங்க சமயச்சார்பின்மை உதவாது. அதே சமயம் நான் சமயசார்பின்மையையும் மறுத்து கூறவில்லை. அதை நாம் ஆதரிக்கத்தான் வேண்டும். ஆனால் சமயச்சார்பின்மையால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று நான் எண்ணவில்லை.

பொறி / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / சில்வர் ஜெலட்டின் அச்சு / 1991-1996
பொறி / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / சில்வர் ஜெலட்டின் அச்சு / 1991-1996

மார்க்சிசம் பற்றி பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. ஆனால் கார்ல் மார்க்ஸ் மூலதனம் எனும் நூலில் ஓரிடத்தில் வாழும் மக்களையும் விவசாயிகளையும் எங்கனம் இடம் பெயரச்செய்து பெருந்தியம் அடிப்படையான சமுதாயத்தை நிறுவுவது என்பது பற்றி விவரிக்கின்றதல்லவா?

முகமதுவும் கார்ல் மார்க்சும் சில விஷயங்களில் ஒன்று படுகிறார்கள். அதில் ஒன்று எதிர்கால கணிப்பு பற்றியது. ஒன்றுபட்ட சங்க அமைப்பு என்பது முதன் முதலில் புத்தர் பிரான் காட்டிய வழியாகும். அனைத்துமே ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சமுதாய அமைப்பு, நவீன நாகரிகத்தில் ஒரு எதிர்பார்ப்பாகும். முகமது கூறும் தௌஹித் என்பது மனிதன் அறிவை சேகரிக்கும் பல்வேறு விதங்களை கூறுகிறது. இதில் மிஹ்ராஜ், ஞானம், பேரறிவு, புராக், காமதேனு, விண்ணில் பறத்தல் ஒன்றுபட்ட பிரக்ஞை உணர்வு, ஒரே இறைவனை தொழுதல் போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கியுள்ளன. இதனை இப்பொழுது விமர்சனத்திற்கு உற்படுத்தி இந்த கொள்கை நம்மை எங்கே அழைத்துச்சென்றுள்ளது என்பதை பற்றி ஆராய வேண்டும். நான் கையில் துப்பாக்கி தாங்கிய மாவோ உருவப்படத்தை எங்கேயும் கண்டதில்லை. ஆனால் தற்பொழுது ஒவ்வொரு மாவோயிஸ்டும் கையில் துப்பாக்கி தாங்கித்தான் அலைகிறான். நாம் அனைவருக்குமே ஒரே நம்பிக்கையின்மை வந்து சூழ்ந்துள்ளது. எதிர்கால வாழ்வில் நமக்கு நம்பிக்கையே போய்விட்டது.

உண்மையை எப்படி அறிவது என்றும் புலப்படவில்லை. இது ஒரு சிக்கலான சூழ்நிலை. என்னுடைய புகைப்பட படைப்புகள் ஒன்றில் காஷ்மீரிலிருந்து கொண்டு வந்த துப்பாக்கி குண்டு, ஒரு எலிப்பொறி மற்றும் ஒரு கத்தி கொண்டு இதனை விளக்க முற்பட்டுள்ளேன். ஒரு வன்முறையற்ற சூழ்நிலையை நான் தேடுகிறேன். இதற்காகத்தான் நாராயண குரு மற்றும் நடராஜ குருவின் பிம்பங்களை தேடுகிறேன். 1975 இந்தியா அவசர சட்டத்தின் கரங்களால் அழிக்கப்பட்ட ராஜன் என்பவரின் உருவத்தை நான் வடித்துள்ளேன். ஆனால் இது நக்சல் கொள்கையின் மேல் கொண்ட பரிவால் எழுந்ததல்ல. அவனை நான் ஒரு மாவீரனாக கருதவில்லை. அதே சமயம் ஒவ்வொருவரின் மனச்சிக்களின் உருவமாக அவனுடைய முகம் தோன்றுகிறது. மட்டாஞ்சேரி நீதி மன்றத்தின் முன்பு அரசியல் காரணத்தினால் கொலை செய்யப்பட்ட தொழிலாளர்கள் பற்றிய படத்தினை நான் உருவாக்கியுள்ளேன். அந்தப்படத்தில், குருதியில் தோய்ந்த ஆடைகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. இந்த விதத்தில் கேரள மக்களின் வன்முறை உணர்வு வெளிக்கொணரப்பட்டுள்ளது. ஆதி மனிதனின் உள்ளார்ந்த நோக்கங்களில் சில இன்னும் நம் மனதில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கின்றன என்பதை கன்னூரில் நடந்த அரசியல் கொலைகள் எடுத்துக்காட்டுகின்றன. நாகரிகத்தில் முன்னேற்றம் அடைந்த மேலை நாடுகளிலும் இனவெறி தலை தூக்கியுள்ளது. முஸ்லிம் பெயர் கொண்ட ஒருவர் பிரிட்டன் அல்லது பிரான்ஸ் செல்லும் பொழுது அவர் சந்தேகத்தோடே நோக்கப்படுகிறார். இஸ்லாமிய தனித்துவ உணர்வு இல்லாத ஒருவர் கூட தன்னுடைய இஸ்லாமிய பெயரின் காரணமாக மேல் நாடு விமான நிலையங்களில் தீவிரமான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறான். நான் வெளிநாடு செல்லும் போதெல்லாம் இங்ஙனம் இஸ்லாமிய பெயர் கொண்டதனால் நான் இஸ்லாமிய வகுப்புடன் சேர்க்கப்படுகிறேன். இந்தியாவிலோ இஸ்ரேலிலோ இத்தகைய சம்பவம் ஏற்படாமல் இருக்கலாம். எனினும் நம்முடைய நவீன நாகரிகம் மற்றும் சமயச்சார்பின்மையின் தற்கால நிலை இது தான். இதில் வேடிக்கை என்னவென்றால், கார்ல் மார்க்ஸ் கல்லறையும் இதே லண்டனில் தான் உள்ளது. தனது ஓவியப்படைப்புகளுக்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக எம். எப். ஹுசைன் தனது 87 வயதில் நாடு கடந்து வெளிநாட்டில் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பாரதநாட்டின் கலைச்சிறப்பிற்கு அவர் செய்த சேவை குறித்து யாருமே எண்ணுவதே இல்லை.

டிஜிட்டல் நிலா / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / 1995 - 2005
டிஜிட்டல் நிலா / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / 1995 – 2005

அனைத்தையும் அரவணைக்கும் ஒரு பொருளாதார உலகிற்கு மாற்றாக எழுந்தவை இந்த தனித்துவ அடையாளம் மற்றும் பிறந்த இனம் குறித்த பிரச்சினையா?

இருக்கலாம். ஐரோப்பாவில் சில இடங்களில் கொக்க கோலாவை விட தண்ணீர் விலை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மக்கள் தண்ணீரை ஒழித்து கொக்க கோலா குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இன உணர்வு மற்றும் ஜாதி உணர்வு இவையெல்லாம் கடந்த மெய்ப்பாடுகளாகும். தமிழ்நாட்டில் தலித்துகள் என்று கூறப்படும் தாழ்ந்த சாதியரை அனுமதிக்காமல் இருக்க சில இடங்களில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. ஒரு அவமானச் சின்னமான இந்த தவறை ஒரேயடியாக இடித்து தள்ளுவதற்கு பதிலாக, அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஊடகங்களில் வாயிலாக கொண்டாடப்படும் ஒரு அமைவாக அமைந்துள்ளது. ஒரு சமயம் நான் குரானை ஒரு பொருளற்ற உபதேச நூலாக கருதியிருந்தேன். எதிர்மறை உணர்வு ஆக்கிரமத்திருந்தது. ஆனால் இப்பொழுது நான் அங்கனம் எண்ணவில்லை. குரான், பைபிள் மற்றும் வேதங்கள் அனைத்துமே தீவிரமான முயற்சியின் காரணமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு அறிவுக் களஞ்சியமாகும்.

மனிதனும் கருவிகளும் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2012
மனிதனும் கருவிகளும் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2012

என்னுடைய நோக்கம் ஒரு பிரதேசம் சார்ந்த முயற்சியின் மூலம் அகிலம் சார்ந்த உணர்வினை கண்டறிவதாகும். ஒரு பிரதேசம் சார்ந்த வாழ்க்கையின் உருவங்களை நான் வகைப்படுத்தி அதன் மூலம் ஒரு தனிப்பட்ட நெறியினை கண்டறிய முற்படுகிறேன். நான் ஒரு அழிவற்ற தன்மையை நோக்கி பயணிக்கவில்லை. டேவிட் ஒரு அழிவற்றவனாக உருவாக்கப்படவில்லை. எல்லா ஆக்கங்களுமே காலவரைக்கு உட்பட்டவை தான். காலத்தால் அழியாத ஒரு கலவைக்கல் பிரதிமத்தை உருவாக்க நான் விரும்பவில்லை. கலையென்பதே எளிதாகவும் அனைவரும் அறியக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அது குழப்பமான உருவமாக அமையக்கூடாது. அதனூடே உள்ளீடும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனும் ஒருங்கிணைந்த அமைவுடனும் மிளிர வேண்டும். ஒரு பெரிய திரைசீலையில் ஒரு பன்றியோ அல்லது ஒரு காட்டெருமையோ வரையப்படலாம். அவைகளும் தமக்கே உரிய பாணியுடன் பார்வையாளர்களை எதிர் கொள்ளும். கலைப்படைப்புகள் தம்மைத்தாமே வெளிப்படுத்துகின்றன. பாரததேசத்தில் பழம்பெரும் ஓவியர்களும் பல்வேறு ஓவியங்களையும் சிற்பங்களையும் அமைத்தார்கள். அவர்கள எவற்றிலும் தங்களது கையெழுத்தினை போடவில்லை. அஜந்தா, எல்லோரா சிற்பங்களில் அவற்றை செய்தவர்கள் பெயர் காணப்படுவதில்லை. பல்லவ சோழர் காலங்களிலும் எந்த கலைஞனும் கைவினைஞர்களும் தங்களது படைப்புகளில் கையோப்பமிடுவதில்லை.

தீண்டத்தகாதவர்கள் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2000
தீண்டத்தகாதவர்கள் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2000

தமது பெயரை காலவதமாக்கி கொள்ள அவர்கள் தமது கலையை பயன்படுத்தவில்லை. அவர்கள் காலவகைகளை மட்டுமே வெளிப்படுத்துகின்றனர். மனிதன் எப்பொழுது கைகளை பயன்படுத்த துவங்கினானோ அப்பொழுது மனித நாகரிகம் உருவாக துவங்கியது என்று கார்ல் மார்க்ஸ் கூறுகிறார். இந்தக் கைகளை கொண்டுதான் மனிதன் கார் ஓட்டுகிறான், துப்பாக்கி ஏந்துகிறான். ஓவியம் வரைகிறான், சிற்பங்களை வடிக்கிறான். எதிர்மறை உணர்வுகளை காட்ட தங்களுடைய கரங்களை உயர்த்துகிறான். இந்தக் கரங்களை கொண்டு தன்னை சுத்தப்படுத்தி கொள்கிறான். மனிதன் நிமிர்ந்து நிற்கத்துவங்கி, கரங்களை உபயோகப்படுத்திய பின்பு தான் நாகரிகமே தோன்றுகிறது. எனவே எப்படி ஒருவன் தன் கரங்களை பயன்படுத்தலாம், எதற்காக பயன்படுத்தலாம் என்பதே கலையின் பொருள்.

தீண்டத்தகாதவர்கள் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2000
தீண்டத்தகாதவர்கள் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2000

மனிதனும் கருவிகளும் என்ற உங்களுடைய படத்தொகுப்பில் நீங்கள் புலையா, பறையா (தாழ்த்தப்பட்ட மக்கள்) மற்றும் நவீன இந்துக்கள் பற்றி படைத்துள்ளீர்கள். கேரளாவில் தற்பொழுது காணப்படும் மறுமலர்ச்சி இயக்கத்தை நீங்கள் ஸ்ரீ நாராயண குரு வழிமுறை கண்ணோட்டத்தில் காணுகிறீர்கள். அதற்கு முன்பே தமிழ்நாட்டில் துவங்கிய பக்தி மார்க்கத்தின் படைப்புகள் உங்கள் படைப்புகளில் காணப்படுவதில்லையே, ஏன்?

தீண்டத்தகாதவர்கள் என்ற தலைப்பில் உள்ள எனது படைப்பே இந்த கேள்விக்கு பதில்.

உங்களது படைப்புகளில் காணப்படும் தனிப்பட்ட குறிப்புகள் எவை? உதாரணமாக விலங்குகள் என்ற தலைப்பில் பெயரிடப்பட்ட உங்களுடைய படைப்பு தொகுப்புகளில் எத்தகைய விலங்கு சார்ந்த சின்னங்கள் படைக்கப்பெற்றுள்ளன?

இத்தகைய படைப்புகளுக்கு தனிப்பட்ட வாழ்வு சார்ந்த முன்மாதிரி உருவங்கள் அடிப்படையாக அமைவது இயல்பானது – படைப்பில் மேன்மையை கொண்டு வர கற்பனையான அந்த உருவங்களை நாம் சார்ந்துள்ளோம். தன்னியல் சார்ந்த ஆர்வங்களும், சுதந்திரமும், கலையுணர்வும் இப்படைப்புகளில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆயினும் இறுதியாக இந்த படைப்பு ஒரு சுய மதிப்பீட்டினை சார்ந்ததாக இருக்காது. என்னுடைய வழியாவது, இந்த உருவங்களை பலவற்றின் கலவையாக படைப்பதே, அதாவது, தமக்குடனே எதிரிடையான பின்புலத்திலிருந்து எழுந்த உருவங்களை ஒன்றாக இணைத்து படைப்பதே. ஆனால், இந்த படைப்புகளை உருவாக்கும்போது எந்த ஒரு தனிப்பட்ட கருமத்தின் மீதோ கொள்கையின் மீதோ இறையியல் மீதோ நான் அழுத்தம் கொடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால், இவை எதனையும் முழுமையாக நாம் நம்ப முடியாது. இவை அனைத்தையும் நாம் சோதனை செய்துள்ளோம்.  நாம் இப்பொழுது சுவற்றினை உடைத்து முன்னே செல்ல வேண்டும்.

மனிதனும் கருவிகளும் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2012
மனிதனும் கருவிகளும் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2012

இதற்காக நாம் பயன்படுத்தும் ஊடகம் எது? இது எதனால் உருவாக்கப்பட்டது? இரண்டரை லட்சம் செலவு வைக்கும் சில்வர் ப்ரொமைட் தாளில் அச்சடிக்கப்பட்டுள்ளதா? இந்தக் கேள்விகள் எல்லாம் காலப் படைப்பை பொருத்தமட்டில் அர்த்தமற்றவை. இவை எல்லாவற்றுக்குமே அடிப்படையாக உள்ள தூய்மையையும் நற்பண்புகளையும் நான் தேடி அறிந்து அவற்றை என்னுடைய படைப்புகளின் மூலம் கொண்ட வர முனைகிறேன். பொதுமை சார்ந்த ஒரு கலை இடத்திற்கான தேடல் இது. ஒரு விளம்பர படம் வரையும் ஒரு சிறிய கலைஞன் கூட நுண்கலையை உருவாக்க முடியும். தற்போது மக்கள் நவீன நாகரிகத்திலும் வசதிகளிலும் வாழ்ந்தாலும், அவர்கள் மனதின் அடிவாரத்தில் சில தனிப்பட்ட உணர்வுகள் இன்னும் உள்ளன. எடுத்தக்காட்டாக, தீவிரமான சமய கட்டுபாடுகளை பின்பற்றும் மக்களின் ஆன்மாவில் இன்றும் சூபி போன்ற மெய்யுணர்வு இருப்பதை காணலாம். இந்த அடிப்படையான உணர்வு தான் எனது படைப்புகளின் முக்கியமான பகுதி. இது நான் ஒரு படைப்பாளனாக என்னை காட்டுகிற ஒரு குறியீடு. ஒரு பிரதேசம் சார்ந்த வாழ்க்கையிலிருந்துதான் நான் பயன்படுத்தும் ஒளி வருகிறது. சந்தியா காலத்தின் ஒளி நான் வசிக்கும் இந்த இடத்தின் ஒரு தனிச்சிறப்பு என்பதை கண்கூடாக நானறிவேன். கலைகளின் பல்வேறு வெளிப்பாடுகள் ஆதர்ஷ உணர்வை குலைக்க முடியாது.

டிஜிட்டல் நிலா / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / 1995 - 2005
டிஜிட்டல் நிலா / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / 1995 – 2005

புகைப்படக்கலையென்பது முப்பது வினாடிகளில் அமைகின்ற ஒரு ஆழ்ந்த சாந்த நிலையை குறிப்பது. இந்தக்காலத்தை பதிவேடுப்பது மற்றும் நாம் நிரந்தரமாக இழந்து போன கணங்களை பதிவில் வைப்பது, புகைப்படம், காலனித்துவ பீதியினை உருவாக்கும். சுடு மற்றும் கொல் போன்ற ஆதிக்க உணர்வினால் செயல்படுத்தப்படும் வழிமுறையை புகைப்படக்கலை வெளிப்படுத்துகிறது. இந்த தாக்கத்தினால் தான் நாம் புகைப்பட கருவிகளின் முன் அச்சத்தால் உறைந்து நிற்கிறோம். இந்த பேரச்சம் தான் எனது ஊடகம். இந்த ஊடகத்தில் சில அடிப்படையான பேருண்மையான   நிலை உள்ளது. இவற்றை தேடுவது தான் ஒரு கலைஞனின் படைப்பின் ஆதாரம். நோக்கம்.

{ புகைப்பட நுண்கலையில் அபுல் கலாம் ஆசாத் இந்தியாவில் உள்ள தலை சிறந்த வித்தகர்களில் ஒருவர். அவரது பாட்டனாரும், தந்தையாரும் தமிழ் நாட்டிலே நெசவாளி குடும்பத்தை சேர்ந்தவர்கள். பின்னர் கேரளாவில் கொச்சி நகரிற்கு குடிபெயர்ந்தனர். பின்னாளில் அவரது தந்தை கொச்சி நகரத்தின் ஒரு முக்கிய துணி வியாபாரியாக முன்னேறி வந்தார்.

பயணம் செய்வதிலும் புகைப்படம் எடுப்பதிலும் பெரு ஆர்வம் கொண்ட இவர் இளம் வயதிலேய தனது தந்தையார் மற்றும் அருகாமையிலிருந்த ஒரு ஸ்டுடியோவில் புகைப்பட விஞ்ஞானம் பயின்றார். பின்னர் அவர் P.T.I. நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளராக 12 வருடம் பணி புரிந்துள்ளார். அதன் பின்னர் லண்டனில் புகைப்படம் மேற்படிப்பு பயின்று, ஜெர்மன் மற்றும் பிரான்சில் பணிபுரிந்தார். இவருடைய நண்பர்களின் சுற்றம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கலைஞர்களையும் அறிஞர்களையும் உள்ளடக்கியது. அவர்களுள் முக்கியமானவர்கள் ஓவி விஜயன், விவான் சுந்தரம், கீதா கபூர், சுனீத் சோப்ரா, MK ரைனா, MA பேபி, R. நந்தகுமார் போன்றவராவர்.

கொச்சிக்கு அருகில் வாழ்ந்து வந்த அவர் தற்பொழுது திருவண்ணாமலையில் வசிக்கிறார். 2013ம் வருடம், திருவண்ணாமலையில் புகைப்படக்கலை மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் ‘ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளை’ என்ற அமைப்பை நிறுவியுள்ளார். அதி வேகமாய் மாறி வருகின்ற நவீன தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களை உள்ளடக்கிய பண்டைத் தமிழகத்தின் சமகால வாழ்வுமுறையையும், கலாச்சாரத்தையும், பன்முகத்தன்மை வாய்ந்த திராவிட சமூகத்தையும் புகைப்பட பதிவுகளாக பாதுகாக்கும் ப்ராஜெக்ட் 365 – பொதுமை புகைப்படக்கலை திட்டத்தின் இயக்குனர் ஆவார். }

கவுண்டரம்மா

பழனியம்மா / புகைப்படம் காப்புரிமை (C) அபுல் கலாம் ஆசாத் / தினம் ஒரு புகைப்படம் பொதுமை புகைப்படக்களஞ்சியம்
பழனியம்மா / புகைப்படம் காப்புரிமை (C) அபுல் கலாம் ஆசாத் / தினம் ஒரு புகைப்படம் பொதுமை புகைப்படக்களஞ்சியம்

அண்டை வீட்டார் ஒருவர் சொல்லக்கேட்டு தான், கிரிவலப் பாதையில் உள்ள தோசைக் கடைக்காரம்மாவை தெரியும். பழனியம்மா தான் அவர் பெயர் என்று இன்று தான் ‘தினம் ஒரு புகைப்பட’ திட்ட ஆவணத்திற்காக கேட்டு தெரிந்து கொண்டேன். அம்மா என்று பெரும்பாலும் அனைவரும் அன்போடு அழைப்பர். திருவண்ணாமலையில் நகரிலுள்ள அகரம் என்ற குக்கிராமத்தில் ராஜலிங்கம், கிளியம்மா தம்பதியினரின் இரண்டாவது மகளாவார். இருபத்தி மூன்று வயதில் கோட்டங்கள் கிராமத்தில் உள்ள ராமலிங்கம் என்பவருடன் திருமணம் நடை பெற்றது. தற்பொழுது அவருக்கு 60 வயது. ஆறு வருடங்களுக்கு முன்பு அவர் கணவர் இயற்கை எய்தினார். இரண்டு மகள்கள் திருமணம் முடிந்து தர்தமர் கணவருடன் சென்று விட, இப்பொழுது தனது இரு மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் கூட்டாக வசித்து வருகிறார்.

தினமும் காலை ஏழு மணியளவில் அரைத்த மாவு, மருமகள் செய்த சாம்பார், சட்டினி போன்றவற்றை பெரிய தூக்குகளில் தூக்கிக்கொண்டு அடி அண்ணாமலையில் உள்ள தனது கடைக்கு வருவார். பதினோரு மணி வரை தான் அவரது தோசைக்கடை. அதன் பின்னர், பல லக்க்ஷம் ஆட்கள் வரும் பௌர்ணமி நாளானாலும், வீடு நோக்கி புறப்பட்டுவிடுவார். அடி அண்ணாமலை பகுதிகளில் வாழும் அடியார்கள் பலரும் இவரது தோசைக்கடைக்கு வருவர். சாமியார்கள் மத்தியில் உள்ள கதைகள், அங்கே நடக்கும் விவரங்கள் பலவும் பகிரப்படும், விவாதிக்கப்படும்… இங்கே வரும் அடியார்கள் பெரும்பாலும் சொந்த பெயர் உபயோகப்படுத்துவதில்லை. சிலரின் உருவம், அல்லது இயல்பு, பழக்க வழக்கம், சொந்த ஊர் போன்றவற்றை வைத்து புனைப்பெயர் கொடுக்கப்படும். அகத்தியர், ஆரணியூர்காரன், மூக்குப்பொடி சித்தர் என பெயரிடப்பட்டு, சில காலம் கழிந்த பின்பு, இயற்பெயர் மறக்கப்பட்டு புனைப்பெயரே நிலைத்து நிற்கும்.

பழனியம்மா குடும்பத்தார்க்கு தற்பொழுது 2 ஏக்கர் நிலம் உள்ளது. நெல், பூஞ்செடி, வேர்க்கடலை போன்றவற்றை பருவம் பார்த்து பயிரிடுவர். சிரித்த முகம், தெளிந்த சிந்தனைகளோடு அன்பாக பரிமாறுவார். ‘தினம் ஒரு புகைப்படம்’ திட்டம் துவங்கிய பொது, தினமும் இங்கு தான் தோசை சாப்பிடுவோம். அபுலும் சளைக்காது அன்றைய விவரங்களை கேட்டு தெரிந்து கொள்வார். பல அடியார்களோடு இங்கிருந்து பழக்கம் ஏற்பட்டது. இங்கு வரும் பலரின் உருவப்படங்களை அபுல் ‘தினம் ஒரு புகைப்படம்’ திட்டத்திற்காக பங்களித்துள்ளார். பழனியம்மா, தொழிலும் ஒரு தர்மத்தினை கடை பிடிக்கிறார். அடியார்களுக்கென மிக குறைந்த விலையில் உணவளிப்பார். ஒரு சிறிய நகரின் மிக எளிமையான முறையில் வாழும் இவரது வாழ்க்கை ஒன்றும் பெரிய செய்தி அல்ல. ஆயினும், சாதாரண மனிதரின் கலாச்சாரம், வாழ்வுமுறையினை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வைக்கும் ‘தினம் ஒரு புகைப்படம்’ பொதுமை புகைப்பட களஞ்சியத்தில் அன்னாரது புகைப்படம் இருப்பதை பெருமையாக கருதுகிறோம்.

நன்றி !

துளசி ஸ்வர்ண லட்சுமி

புகைப்படக்கலைக்கென ஒரு ரூவாய் !!!

புகைப்பட காப்புரிமை: புகைப்பட கலைஞர் திரு. அபுல் கலாம் ஆசாத் / 'தினம் ஒரு புகைப்படம்' பொதுமை புகைப்பட களஞ்சியம்
புகைப்பட காப்புரிமை: புகைப்பட கலைஞர் திரு. அபுல் கலாம் ஆசாத் / ‘தினம் ஒரு புகைப்படம்’ பொதுமை புகைப்பட களஞ்சியம்

சமீப காலங்களில், “கலை” மக்களின் மனதிலிருந்தும்  வாழ்விலிருந்தும் வெகுவாக விலகி விட்டது. சமகால கலை முயற்சிகளும் பொதுவாக பெருநகரங்களில் தான் துவங்கப்படுகின்றன. கலை ஒரு வியாபாரப் பொருளாக மட்டுமே கணக்கிடப்பட்டு, அங்காடிகள், கலைக்காட்சிக்கூடங்கள் என அனைத்தும் ஓவியம், சிற்பம், புகைப்படம் போன்றவற்றை விற்பனை செய்கின்றனர்.  பழங்காலங்களில், கலை நமது கலாச்சாரத்திலும், வாழ்விலும், உள்ளத்திலும் வியாபித்து நின்றது. ஓவியங்கள், சிற்பங்கள் என காண்பவரெல்லாம் வியக்கும் வண்ணம் உயிரோட்டமான ஒரு கலைக்களஞ்சியமாகவே, பழங்கால குகைகளும் கட்டிடங்களும் இன்றும் நிமிர்ந்து நிற்கின்றன. இவற்றினை நமது கலாச்சார சின்னமாக பேணி பாதுகாத்து வருகிறோம்.  இப்பொழுது உள்ள கால சூழ்நிலையிலும் இது போன்ற கலை முயற்சிகள் அவசியமானதாகும். பொது மக்கள் சொத்தாக “கலை” தன் உயரிய நிலை பெற வேண்டும்.

சமீப கால கலைகளிலே மிகவும் பிரசித்தி பெற்று, மக்களின் அன்றாட வாழ்க்கையின்  ஒரு அங்கமாக ஊடுருவி நிற்பது ‘புகைப்படக்கலை’ ஆகும். சமகால கலைகளின் சிகரம் என்றே இதனை கூறலாம். கன நேரத்தில் மாறி மறையும் தருணங்களை ஒரு வரலாற்று பொக்கிஷமாக ஆண்டாண்டுக்காலம் பேணி பாதுகாத்து வைக்கும் திறன் கொண்டது.  வாசிக்க முடியாத பாமரனுடனும் பேசும் திறன் பெற்ற கலை புகைப்படக்கலை ஆகும். எளிமையானது. அனைவருக்கும் சொந்தமானது. பண்டைக்காலங்களில் ரசம் போன்ற ரசாயனங்களை கையாண்டு, அவை வெளியிடும் புகையினாலேயே படங்கள் உருவாக்கப்பட்டு வந்தன. அதனாலே தான் பாரம்பரிய முறையினை கையாளும் புகைப்பட கலைஞர்களை ‘ரசசித்தர்’ என்று  அழைக்கலாம். தற்பொழுது பாரம்பரிய புகைப்பட முறை வேகமாக மறைந்து வருகிறது.

புகைப்பட காப்புரிமை: புகைப்பட கலைஞர் திரு. அபுல் கலாம் ஆசாத் / 'தினம் ஒரு புகைப்படம்' பொதுமை புகைப்பட களஞ்சியம்
புகைப்பட காப்புரிமை: புகைப்பட கலைஞர் திரு. அபுல் கலாம் ஆசாத் / ‘தினம் ஒரு புகைப்படம்’ பொதுமை புகைப்பட களஞ்சியம்

கிராமம், சிறு நகரங்களில் வாழும் மக்களும் கலையில் பங்கு பெறவும், வேகமாக மாறி வரும் பண்டைக்கலாச்சாரம், சமகால வாழ்வு முறையினை புகைப்படங்களாக பதிவு செய்யவும், அழிந்து வரும் பாரம்பரிய புகைப்பட கலையினை மேம்படுத்தும் நோக்கத்துடனும், ‘தினம் ஒரு புகைப்படம்’ (Project 365) என்ற திட்டத்தினை, திருவண்ணாமலையில் உள்ள இ. டி. பி. (Ekalokam Trust for Photography) என்ற நிறுவனம் துவங்கி உள்ளது. இத்திட்டத்தின் முதலாம் கட்டம் திருவண்ணாமலையில் நடை பெற்று வருகிறது. இத்திட்டம், ‘பண்டைத் தமிழகம்’ என்றழைக்கப்படும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, மற்றும் ஆந்திர பகுதிகளில் நடத்தப்படும். வரும் ஆண்டுகளில், சங்க கால துறைமுக நகரங்களான கொற்கை, டிண்டிஸ், முசிரிஸ்  மற்றும் காவிரி நதி சார்ந்த நகரங்களிலும் நடத்தப்படும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல், நாற்பது புகைப்பட கலைஞர்கள் பல்வேறு கோணங்களில் திருவண்ணாமலையினை ஆவணப்படுத்தி வருகின்றனர். ஓராண்டுக்காலத்திற்குப் பின்,  இந்த புகைப்பட அச்சுகள் காட்சிக்கு வைக்கப்படும். இவை ஒரு புத்தக வடிவிலும் வெளியிடப்படும். அது மட்டுமல்ல, இந்த கண்காட்சி தென்னிந்தியாவின் பல பாகத்திலும் காட்சிக்கு வைக்கப்படும். இதன் பொருட்டு,  ‘முகாமுகம் – புகைப்பட கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு’ நிகழ்ச்சி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. கல்லூரிகள், நாடக அரங்குகள், கலை கூடங்கள், விழாக்கள், என பல்வேறு பொது இடங்களிலும் இந்நிகழ்ச்சி நடதப்படுகின்றது. தெருக்கூத்து, நாடகம், பாட்டு, நாட்டியம் போலவே புகைப்படக்கலையும் நமது வாழ்க்கையின் முக்கிய அங்கமென்பதை நிலை நாட்டும் விதமாக, பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தென்னிந்தியாவில், பல்வேறு பகுதிகளில் ‘பொதுமை புகைப்பட களஞ்சியம்’ உருவாக்கும் எண்ணத்துடன் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. விலைமதிப்பில்லாத புகைப்படங்கள் ஒரு பொது சொத்தாக, நமது கலாச்சார சின்னமாக  நிறுவும் இந்த அரிய முயற்சிக்கு,  பலரின் பங்களிப்பும் ஆதரவும் அவசியமானதாகும். பெரிய நிறுவனங்களின் உதவி இல்லாது, மக்களின் பங்களிப்புடனே செயல்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். அதனால் தான் “கலைக்கென ஒரு ரூவாய்” என்ற பிரச்சாரத்தினை இ.டி.பி. நிறுவனம் துவங்கி உள்ளது. அனைவரும் பங்களித்து, இந்த பொதுமை புகைப்பட கலைத் திட்டத்திற்கு  உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இத்திட்டத்தினை தலைமையேற்று செயல்படுத்தி வருபவர் பிரபல இந்திய  புகைப்பட கலைஞர் திரு. அபுல் கலாம் ஆசாத் ஆகும்.

முதலாம் பொது காட்சி' டிசம்பர் மாதம் ஏழாம் தேதி, திருவண்ணாமலை
முதலாம் பொது காட்சி’ டிசம்பர் மாதம் ஏழாம் தேதி, திருவண்ணாமலை

இந்த திட்டத்தின் ‘முதலாம் பொது காட்சி’ டிசம்பர் மாதம் ஏழாம் தேதி திருவண்ணாமலையில் நடை பெற உள்ளது. அனைவரும் பங்கு பெறவும்.

தென்னிந்தியாவின் பண்பாடும் வாழ்க்கைமுறையும் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. மாறுகின்ற இந்த பண்பாட்டின் வெளிப்பாடுகளை புகைப்பட வடிவில் பாதுகாத்து வைக்கும் ஒரு சிறந்த முயற்சியே இ.டி.பி. அமைப்பினால் தொடங்கப்பட்டுள்ள Project 365  என்று மகுடமிடப்பட்டுள்ள  ‘பொதுமை புகைப்படக்கலை திட்டமாகும்’. இதன் முதல்படி தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. பல்வேறு கலாச்சாரங்களின் கோணங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த புராதன நகரத்தின் சிறப்புகளை இந்தியா முழுவதும் உள்ள புகைப்படக்கலைஞர்கள் சம்பிரதாயமான ஊடக வழியில் ஓராண்டுக்காலம் ஆவணப்படுத்துவார்கள். முடிவில் கண்காட்சியும் புத்தகமும் வெளியிடப்படும். இந்த திட்டம் இக்கால இந்திய புகைப்பட கலைஞர் அபுல் கலாம் ஆசாத் அவர்களால் வழி நடத்தப்படுகிறது. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் சங்க கால துறைமுக நகரங்களாகிய தொண்டி, முசிறி மற்றும் காவேரி பாயும் நிலம் சார்ந்த அனைத்து ஊர்களின் கலைச்சிறப்பை ஆவணப்படுத்தும்.

இந்த பதிப்பிலுள்ள புகைப்படங்களின் பதிப்புரிமை புகைபடக்கலைஞரின் உரிமை ஆகும். மீண்டும் பிரசரிப்பதற்கோ வேறு பதிப்புகளில் உபயோகப்படுத்துவதற்கோ இ.டி.பி. நிறுவனத்தின் (Project 365 பொதுக்களஞ்சியம்) முன் அனுமதி அவசியம். மேலும் தகவல் அறிய {0}4175 237405 / {0}94879 56405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.